இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
24 வைகாசி 2018 வியாழன் 14:30 | பார்வைகள் : 18697
எட்டாம் மற்றும் ஒன்பதாம் வட்டாரங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டாம் வட்டாரம் குறித்த சுவையான தகவல்கள், இன்றைய இரண்டாம் நாள் தொடரில்...!!
பரிசுக்குள் இருக்கும் 20 வட்டாரங்களில், மிகச்சிறிய வட்டாம் இரண்டாம் வட்டாரம்ந்தான். 0.99 சதுர கிலோமீட்டர்கள். அதாவது 245 ஏக்கர்கள் மட்டுமே கொண்டது.
இரண்டாம் வட்டாரத்தில் என்ன ஸ்பெஷல்?? L'Obs பிரெஞ்சுப்பத்திரிகையின் தலைமைச் செயலகம் இங்கு உள்ளது. ஆனால் அது தவிர, எண்ணற்ற வியாபாரத்தளங்களும், மொத்த விற்பனை நிலையங்களும் இங்கு குவிந்துள்ளன. குறிப்பாக, துணிகளின் மொத்த விற்பனை நிலையம் இங்கு குவிந்துள்ளது.
இரண்டாம் வட்டாரத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் எண்ணிக்கை
22,400 என தரவு சொல்கிறது. ஆனால் 61,672 பேருக்கு வேலைத்தளமே இந்த குட்டியூண்டு வட்டாரம் தான்.
1860 ஆம் ஆண்டு, பரிஸ் வட்டாரங்களாக பிரிக்கப்படும் போது, இரண்டாம் வட்டாரத்தில் 81,609 பேர்கள் வசித்தனர். பின்னர் இது படிப்படியாக குறைந்து தற்போது 22,400 ஆம் சுருங்கியுள்ளது.
பிரபலமான கொரியர் சேவை நிறுவனமான Bourbon இன் தலைமைச் செயலகமும் இங்குதான் உள்ளது.
சொல்ல மறந்துவிட்டோமே, இங்குதான் 14 மில்லியன் புத்தகங்களுடன் உள்ள Bibliothèque nationale de France கட்டிடம் உள்ளது. 1461 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தற்போது 2,300 பேர் பணி புரிகின்றார்கள்.
அட, Opéra-Comique அரங்கு கூட இங்குதான் உள்ளது. இதே ஆச்சரியத்தோடு, நாளை மூன்றாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!