Paristamil Navigation Paristamil advert login

பட்டாசுக்கு தடை விதித்த பிரபல ஐரோப்பிய நாடு

 பட்டாசுக்கு தடை விதித்த பிரபல ஐரோப்பிய நாடு

7 தை 2025 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 738


ஜெர்மனியில் புத்தாண்டை முன்னிட்டு பலவதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது.

அதன் போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் வன்முறைகள் காரணமாக பட்டாசுகளை தடைசெய்ய மக்கள் அதிகமாக வலியுறுத்து வதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது கையொப்பத்தை காட்டி, பட்டாசு தடை வேண்டி உள்துறை அமைச்சகத்திற்கு மனுவை அளித்துள்ளனர்.

இந்த ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்ட பொலிஸாரும் பொதுமக்களும் காயமடைந்தனர். குறிப்பாக, பெர்லினில் 30க்கும் மேற்பட்ட பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

பெர்லினின் Schoeneberg பகுதியில் ஒரு பட்டாசு வெடிவிபத்தில் 40 வீடுகள் சேதமடைந்தன.


மேலும், பெர்லினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல் வழியாக பட்டாசு வெடிப்பதை இணையத்தில் காணொளியாக வெளியிட்ட பாலஸ்தீன சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் சனிக்கிழமை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜேர்மனியின் பொலிஸ் சங்கம், இந்த வன்முறைகளைத் தடுக்க, புத்தாண்டு பட்டாசை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர், பட்டாசை தவறாக பயன்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள், 5 ஆண்டுகள் வரை சிறைவாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், ஜேர்மனி முழுவதும் பட்டாசுக்கு ஆதரவு குறையாததால், பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்டோர் தேசிய அளவில் பட்டாசை தடை செய்யும் எண்ணத்தை எதிர்த்துள்ளனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் பட்டாசு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து எழுந்துள்ளதோடு, மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் முன்வைத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்