தீவிர வலதுசாரி Jean-Marie Le Pen அவர்கள் இன்று சாவடைந்தார்.
7 தை 2025 செவ்வாய் 12:51 | பார்வைகள் : 1458
தீவிர வலதுசாரி கட்சியான Front national கட்சியை நிறுவிய Jean-Marie Le Pen இன்று தனது 96 வது வயதில் சாவடைந்தார் என அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்
நீண்ட நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்றைய தினம் சாவடைந்தார்.
பிரான்சின் அரசு தலைவர் தேர்தலில் பல தடவைகள் போட்டியிட்ட Jean-Marie Le Pen 2022 ஆம் ஆண்டு Jacques Chirac அவர்களுடன் போட்டியிட்டு அந்த தேர்தலில் முதல் தடவையாக இரண்டாவது சுற்று தெரிவானார் .
பிரான்சில் Morbihan எனும் கடற்கரை நகரில் 20/07/1928 ஆண்டு, தையல் கலையை தனது தொழிலாகக் கொண்ட தாய்க்கும், மீன்பிடி தொழிலை தொழிலாகக் கொண்ட தந்தைக்கும் இவர் பிறந்திருந்தார்.
மேலதிக விபரங்கள் பின்னர் செய்திகளாக வெளிவரும் paristamil.com இணையத்தோடு இணைந்திருங்கள்.