Paristamil Navigation Paristamil advert login

சார்லி- எப்தோ தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவுநாள்!!

சார்லி- எப்தோ தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவுநாள்!!

7 தை 2025 செவ்வாய் 13:32 | பார்வைகள் : 698


சார்லி-எப்தோ தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று ஜனவரி 7, செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரான்சின் பிரபலமான அரசியல் கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்தோ அலுவலகம் மீது 2015 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி அன்று பயங்கராவதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஊழியர்களையும், ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றனர். இதில் 12 பேர் கொல்லப்பட்டு, 11 பேர் காயமடைந்திருந்தனர்.

அல்-கொய்தா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரினர். முகமதினை ஆபாசமாக வரைந்ததாக தெரிவிக்கப்பட்டு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.

அதன் நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை பரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் Rue Nicolas-Appert வீதியில் காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அஞ்சலி இடம்பெற்ற இடம் சார்லி எப்தோ அலுவலகம் முன்னர் அமைந்திருந்த இடமாகும். தாக்குதலின் பின்னர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.

சார்லி எப்தோ தாக்குதலில் முக்கிய கேலிச்சித்த ஓவியர்களான Cabu, Charb, Honoré, Tignous மற்றும் Wolinski ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்..

எழுத்துரு விளம்பரங்கள்