ஈஃபிள் கோபுரம் அருகே ஒன்பது விவசாயிகள் கைது!!
7 தை 2025 செவ்வாய் 15:09 | பார்வைகள் : 14097
ஈஃபிள் கோபுரம் அருகே உழவு இயந்திரங்கள் மூலம் அத்துமீறி நுழைந்த ஒன்பது வரையான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 5 மணிக்கு சற்று முன்னதாக எவரும் காணாத வண்ணம் உழவு இயந்திரங்கள் மூலம் அவர்கள் பரிசுக்குள் நுழைந்து ஈஃபிள் கோபுரம் அருகே வந்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்தனர். மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் இருவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல வாரங்களாக உழவர்கள் வீதி முடக்க போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களது அனுமதியற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan