ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
19 வைகாசி 2018 சனி 12:34 | பார்வைகள் : 18687
*இத்தொடரின் முதல் இரண்டு பகுதிகளுக்கான இணைப்பு கீழே உள்ளது*
இடது பக்க விமானத்தின் இறக்கை உடைந்ததைத் தொடர்ந்து, விமானம் இலத்திரனியல் கோட்பாடுகளை கேட்க மறுத்தது. விமானம் கடுப்பாட்டை இழந்து, சுழல ஆரம்பித்தது.
கதவு உடைந்து விழுந்த இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில், விமானம் பைன் மரக்காடுகளை ஊடறுத்து விழுந்து வெடித்து சிதறியது.
விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ரேடாரின் உதவியுடன் மீட்புக்குழு Oise இல் உள்ள Ermenonville காட்டுக்குள் சென்றனர்.
ஆனால் சோகம் என்னவென்றால், நிலமை அங்கு கைமீறி போயிருந்தது.
விமானத்தில் பயணித்த பயணிகள், பணிப்பெண் குழு, விமானி என அனைவரும் (346 பேர்கள்) உயிரிழந்திருந்தனர். உலகம் முழுவதும் இந்த செய்தி அதிர்ச்சி அலைகளை கிளப்பியிருந்தது.
அதுவரை இடம்பெற்ற அனைத்து விமான விபத்துக்களின் ஒட்டுமொத்த 'ரெக்கோட்' எல்லாவற்றையும் இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முடியறித்தது.
விபத்து இடம்பெற்ற பகுதியிலேயே உயிரிழந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
விபத்து தொடர்பான பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் நடைபெற்றது. இதில் இறுதியாக விமானத்தின் கதவு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியாக அந்த விமானத்தில் பதிவாகிய வார்த்தை, 'எரிபொருள் தாங்கி எரிகின்றது!' என்பதாகும்.
முற்றும்.