தந்தையின் சாவடைந்த செய்தி கேட்டு கண்ணீர் சிந்திய மகள்.Marine Le Pen.
7 தை 2025 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 2983
அண்மையில் இயற்கை அனர்த்தத்தில் சிதைந்து போன பிரான்ஸ் தேசத்தின் கடல் கடந்த மாவட்டமான Mayotte பகுதியில் வாழும் மக்களை நேரில் சென்று பார்வையிட இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றிருந்த Rassemblement national கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளரும், மறைந்த Jean-Marie Le Pen அவர்களின் அரசியல் வாரிசும், மகளுமான Marine Le Pen அவர்கள் தந்தையின் மரணச் செய்தி அறிந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
Mayotte பகுதிக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு Kenyaவின் Nairobiக்கு விமான பயணத்தை மேற்கொண்ட போது அவரோடு கூட பயணித்த பத்திரிகையாளரான Pierrick Bonno, Jean-Marie Le Pen மறைந்த செய்தியை முதலில் AFP செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளதாக அறிந்து கொண்டார். மெதுவாக இந்தச் செய்தி விமானத்தில் பயணித்த மகளான Marine Le Pen அவர்களுக்கு கூறப்பட்டது.
பத்திரிகையாளரின் தொலைபேசியை படம் எடுத்துக் கொண்ட Marine Le Pen முதலில் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். பின்னர் விமானிகளின் அறைக்குச் சென்று அவர்களின் அனுமதியோடு பிரான்சில் வசிக்கும் உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ஆனால் அங்கிருந்த பத்திரிகையாளர்களுடன் அவர் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இன்று இரவு 11:00 மணியளவில் Paris வந்தடைந்த பின்னரும் பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் Rassemblement national நாடாளுமன்ற தலைவர் Jordan Bardella அவர்கள் "toujours servi la France" (பிரான்சுக்கு சேவைகள் செய்தவர்) என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.