நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்! இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து
7 தை 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 236
அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு “நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்” இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இருப்பினும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது திறமையை வெளிப்படுத்தி 391 ஓட்டங்கள் குவித்த தோடு 43.44 என்ற சராசரியுடன் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்துள்ளார்.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் அடித்த 161 ஓட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
ஜெய்ஸ்வால் ஆட்டம் சிறப்பானதாக இருந்தாலும், மற்ற முன்னணி வீரர்களின் பார்ம் காரணமாக இந்திய அணி தொடரை இழந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், அவுஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன். தொடரின் முடிவு எதிர்பார்த்தது போல் அமையவில்லை என்றாலும், நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் தோல்வி காரணமாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்துவிட்டது.