விண்ணில் முளைத்த காராமணி விதைகள்! இஸ்ரோவின் புதிய விண்வெளி சாதனை
7 தை 2025 செவ்வாய் 16:35 | பார்வைகள் : 135
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), 2035-க்குள் தன்னுடைய சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த ambitous திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ், இஸ்ரோ விண்ணில் அனுப்பிய பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த போயம் எனும் பரிசோதனை முயற்சியில், புவி ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் காராமணி விதைகள் வெற்றிகரமாக முளைத்துள்ளன.
இது, விண்வெளியில் நீண்ட கால பயணங்களில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகளை நோக்கி நம்மை ஒரு படி நெருங்கி கொண்டு செல்கிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய கிராப்ஸ் ஆய்வுக் கருவியில், காராமணி விதைகளுக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி போன்ற சூழல்கள் சரியாக பராமரிக்கப்பட்டன.
இதன் விளைவாக, விதைகள் நான்கு நாட்களில் முளைக்கத் தொடங்கின. இந்த சாதனை, இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.