Paristamil Navigation Paristamil advert login

31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஆசிய நாடு

31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஆசிய நாடு

7 தை 2025 செவ்வாய் 16:46 | பார்வைகள் : 1163


ஈரான் நாடானது பெண்கள் சுதந்திரமாக செயற்பட கூடாது என்ற கொள்கையை பின்பற்றி வருகின்றது.

இந்நிலையில் ஒரே ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தொண்டு நிறுவனம் ஒன்று, 2008ஆம் ஆண்டு முதல், ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுதல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்திவருகிறது.


அவ்வகையில், இதுவரை ஈரானில் பெண்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 2024இல்தான் என அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2010 முதல் 2024வரை, ஈரானில் 241 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


பெரும்பாலும், போதைக்குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுதான் அந்தப் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர், தங்களைக் கொடுமைப்படுத்திய தங்கள் கணவனைக் கொன்றதாகத்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்