பதவி விலகும் கனடா பிரதமர் - கொண்டாடும் மக்கள்
7 தை 2025 செவ்வாய் 16:57 | பார்வைகள் : 845
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பை தொடர்ந்து அதனை கொண்டாடும் முகமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது.
கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்காக கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ள ட்ரூடோ, புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை தனது பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதவி விலகியதை கொண்டாடும் விதமாக லாங்லி பிசி டெய்ரி குயின் (Langley BC Dairy Queen) என்ற ஹோட்டல் $2-க்கு பர்கர்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆன்லைனில் பரவும் புகைப்படங்களில் Dairy Queen நிறுவனத்தின் “DQ லோகோ” பொறிக்கப்பட்ட பெரிய பலகையில் "கிரில் & சில் ட்ரூடோ ராஜினாமா சிறப்பு $2 பர்கர்கள்”("Grill & Chill TRUDEAU RESIGNATION SPECIAL $2 BURGERS Drive-thru.") என்று விளம்பரப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடக பயனர்கள் பலரும் தங்கள் ஆச்சரியத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் “இது உண்மையா? LMAO மதிய உணவிற்கு நாளை DQ செல்ல இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.