பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல €10 யூரோ கட்டணம்..! - ETA விசா என்றால் என்ன..?!!
7 தை 2025 செவ்வாய் 18:21 | பார்வைகள் : 3371
பிரித்தானியா ETA எனும் "மின்னணு பயண அனுமதி" எனும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்பவர்களில் சிலருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்வதற்கு விசா தேவைப்படுவோர், பயணத்திகதிக்கு 48 மணிநேரங்களுக்கு முன்பாக இந்த ETA விசாவினைப் பெற்றிருக்க வேண்டும். அது 2 வருடங்களுக்கு அல்லது / இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கடவுச் சீட்டு காலாவதியாகும் என்றால் அதுவரை செல்லுபடியாகும்.
இதற்காக €10 யூரோக்கள் செலுத்தவேண்டும்.
ஜனவரி 8, நாளை புதன்கிழமை முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது. விமானம், கப்பல், தரைவழி என எந்த வழிப் பயணமாக இருந்தாலும் இந்த ETA எனப்படும் விசா முக்கியமானதாகும்.