Paristamil Navigation Paristamil advert login

ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!

ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!

18 வைகாசி 2018 வெள்ளி 15:30 | பார்வைகள் : 18750


*இத்தொடரின் நேற்றைய பகுதிக்கு கீழே இணைப்பு உள்ளது* 
 
மார்ச் மாதம் 3 ஆம் திகதி, 1974 ஆம் ஆண்டு. ஓர்லி விமானநிலையத்தில் 'துருக்கி எயார்லைன்ஸ்'க்கு சொந்தமான அந்த McDonnell Douglas DC - 10 விமானம் பறப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தது. 
 
குறித்த விமானம் இஸ்தான்புல்லின் Atatürk விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக 167 பயணிகளுடனும், 11 விமான குழுவோடும் வந்து இறங்கியது. 
 
வழக்கமாக எப்போதும், ஓர்லி விமானநிலையத்தில் இருந்து இலண்டன் செல்ல முன்பதிவுகள் மாத்திரமே ஏற்ற்கொள்ளப்படும். ஆனால் அன்று, 'பிரிட்டிஷ் ஐரோப்பியன் எயார்லைன்ஸ்' இன் பணி பணி பகிஷ்கரிப்பால், பிரான்ஸ்-இலண்டன் விமானங்கள் பல இயங்கவில்லை. 
 
இதனால், இலண்டன் நோக்கி செல்ல இருந்த பல பயணிகள் ஓர்லி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். மாற்று விமானங்களில் ஏற்பாடுகள் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. 
 
ஓர்லி விமான நிலையத்தில் இருந்து DC-10 விமானத்தில் இலண்டன் செல்லும் பயணிகள் மேலதிகமாக ஏற்றப்பட்டனர். மொத்தமாக 334 பயணிகளும் 12 விமான குழுவினரும் உட்பட 346 பேர்கள் விமானத்தில் ஏறியதும், நண்பகல் 12.32 க்கு விமானம் ஓடுபாதையில் வேகமெடுத்து..  மேல் நோக்கி பறந்தது...!! 
 
விமானம் மேலெழும்பி இலண்டன் நோக்கி கிழக்கு திசை நோக்கி சென்றது. சிறிது நேரம் பறந்ததும் மேற்கு நோக்கி விமானம் திருப்பப்பட்டது. 
 
23,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும் போது, பின்னால் உள்ள இடது பக்க கதவு திடீரென உடைந்தது. மிக அதிகமான வேகமும், அழுத்தமும் சேர்ந்திருக்க.. உடைந்த கதவு வேகமாக காற்றை உள்ளிளுத்து பயணிகள் அமர்ந்திருந்த இருக்கையை இழுத்தது. 
 
ஒரு சதுர இஞ்ச் அகலத்துக்கு இரண்டு பவுண்டுகள் எடையை கொண்டிருந்தது அழுத்தம். 
 
அந்த அழுத்தம் பயணிகள் இருக்கையை அந்த இடத்தில் இருந்து உடைத்து எடுத்தது. ஆறு ஜப்பானிய பயணிகள் தங்கள் இருக்கைகளுடன் பிய்த்துச் செல்லப்பட்டு கார்கோ கதவுடன் இடித்து, நடுவானில் விமானத்தில் இருந்து வெளியே ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் இழுத்தெறியப்பட்டனர். 
 
விமானம் கட்டுப்பாட்டை இழந்தது!!
 
(நாளை)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்