Paristamil Navigation Paristamil advert login

நகைக்கடை முதலீட்டு திட்டம்: மும்பையில் மிக பெரிய மோசடி

நகைக்கடை முதலீட்டு திட்டம்: மும்பையில் மிக பெரிய மோசடி

8 தை 2025 புதன் 03:19 | பார்வைகள் : 508


மஹாராஷ்டிராவில், முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி பல நுாறு வாடிக்கையாளர்களிடம் பிரபல நகைக்கடை குழுமம், பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நகைக்கடை குழுமம், 'டாரஸ்' கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஆறு கிளைகளுடன் மும்பையில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது.

வட்டியுடன் பணம்


இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்தனர். அந்த வகையில், 52 வாரங்களுக்கு பணம் முதலீடு செய்வோருக்கு, 6 சதவீத வட்டி அளிக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. நுாற்றுக் கணக்கானோர் முதலீடு செய்தனர். பலருக்கு வட்டியுடன் பணம் திரும்ப வந்தது.

இந்த நேரத்தில், நகைக்கடை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி தவுசிப் ரியாஸ் என்பவர், கடந்த ஏழு நாட்களுக்கு முன், 'யு டியூப்' ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 5ம் தேதிக்கு முன்னதாக முதலீடு செய்பவர்களுக்கு 11 சதவீத வட்டி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, 'டாரஸ்' நகைக்கடைகளில் பல நுாறு பேர் முதலீடுகளை குவித்தனர். கூலி வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள் போன்ற நடுத்தர ஏழை எளிய மக்கள் அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தனர்.

வழக்குப்பதிவு


நேற்று முன்தினம் 'டாரஸ்' கடைகள் திறக்கப்படாததை பார்த்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடையின் இரண்டு இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரி, பொது மேலாளர், கடை பொறுப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 'டாரஸ்' குழுமம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சில ஊழியர்களுடன் சேர்ந்து, தலைமை செயல் அதிகாரி மிகப் பெரிய மோசடி சதியை அரங்கேற்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாதர் கிளை கடையில் 100க்கும் மேற்பட்டோர் நுழைந்து கடையை சூறையாடியதுடன், நகைகளை திருடி சென்றதாகவும், அவர்கள் தலைமை செயல் அதிகாரியின் ஆட்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்