திபெத்தில் நிலநடுக்கம்.. உதவிக்குழுவை அனுப்பும் பிரான்ஸ்!!
8 தை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1039
சீனாவுக்கு அருகே தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான திபெத்தில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் 126* பேர் கொல்லப்பட்டுள்ளனர். 188 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.
"திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் தனது இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட இமயமலை மக்களுக்கு உதவ தனது உதவியை வழங்குகிறது." என நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிடார்.
சீனா-நேபாள எல்லைப்பகுதிக்கு அருகே திபெத்தின் Tingri எனும் நகர்ப்பகுதியில் ஏற்பட்ட 6.8 அளவு நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டிடங்கள் இடிந்து நொருங்கியுள்ளன.
அதை அடுத்து மீட்புப்பணிகளுக்காக உதவிக்குழுவை பிரான்ஸ் அனுப்ப உள்ளது. அத்தோடு மனிதாபிமான உதவிப்பொருட்களையும் பிரான்ஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.