முன்னெப்போதும் இல்லாத அளவு மழை.. 2024 ஆம் ஆண்டில் கொட்டித்தீர்த்தது!
8 தை 2025 புதன் 08:00 | பார்வைகள் : 721
சென்ற 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் முழுவதும் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது.
பல்வேறு நகரங்களில் சென்ற ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான மழை கொட்டியது. தலைநகர் பரிசில் 901.1 மில்லிமீற்றர் மழை பதிவானது.
Melun நகரில் 994.9 மில்லிமீற்றர் மழையும், Blois நகரில் 905.6 மில்லிமீற்றர் மழையும் Le Mans நகரில் 960.9 மில்லிமீற்றர் மழையும், அதிகபட்சமாக Saint-Nazaire நகரில் 1,106.1 மில்லி மீற்றர் மழையும் கொட்டித்தீர்த்தது.
சராசரியாக நாடு முழுவதும் 1,075 மில்லிமீற்றர் மழை 2024 ஆம் ஆண்டில் பெய்திருந்தது. 1959 ஆம் ஆண்டின் பின்னர் இதுபோன்ற ஆயிரம் மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகுவது இது ஏழாவது முறையாகும்.