Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டி

இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டி

8 தை 2025 புதன் 05:45 | பார்வைகள் : 173


இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.

அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் தொடர் நடக்கிறது.

அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி பெப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 12 ஆம் திகதி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

15 பேர் கொண்ட அணியை ஜனவரி 12 ஆம் திகதி அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. இதனால் அன்று அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

அணியில் மாற்றம் செய்ய பெப்ரவரி 13 ஆம் திகதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் பந்து வீசவில்லை. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பு இல்லாததால் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

அவர் விளையாடாமல் போனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். 31 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டை வீழ்த்தி சாதித்து இருந்தார். பும்ரா 89 ஒருநாள் போட்டியில் 149 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். விராட் கோலியும் இடம்பெறுவார். சாம்பியன்ஸ் டிராபி போட்டி அவர்களது எதிர் காலத்தை நிர்ணயிக்கும்.

பும்ரா விளையாடும் பட்சத்தில் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது. ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உடல் தகுதி பெற்ற முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்