மறைந்த Jean-Marie Le Pen அவர்களின் மரணத்தை கொண்டாடிய மக்கள்.
8 தை 2025 புதன் 10:06 | பார்வைகள் : 1947
தீவிர வலதுசாரி கட்சியான Front national கட்சியை ஸ்தாபித்து கடும் இனத்துவசத்தை பேசி அரசியலில் பலரின் வெறுப்புகளை சம்பாதித்த Jean-Marie Le Pen அவர்கள் நேற்றைய தினம் சாவடைந்ததை பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக Paris, Lyon மற்றும் Marseille நகரங்களில் கூடி பண்டிகை போல் கொண்டாடியுள்ளனர்.
இந்த செயலை வலதுசாரி கட்சியான Les Républicain கட்சியை சார்ந்த உள்துறை அமைச்சர் Bruno Retailleau அவர்கள் "அவமானகரமான காட்சிகளை கண்டோம்" என தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆனால் கொண்டாட்ட காரர்கள் ஷாம்பெயின் போத்தல்களை உடைத்தும், வானவேடிக்கைகளை செலுத்தியும், பாடல்கள் இசைத்தும் ஆரவாரமாக கொண்டாயுள்ளனர்.
கொண்டாட்டகாரர்கள் தங்களின் கொண்டாட்டம் நியாயமானது, என்றும் Jean-Marie Le Pen அல்ஜீரியாவில் சித்திரவதை செய்பவராக இருந்தார் என்றும், யூத மத நம்பிக்கையை கொண்ட மக்களை அவமானப்படுத்தினார் என்றும், முஸ்லீம் மதத்தை அவமதித்தார் என்றும், மீண்டும் மீண்டும் இனவெறிக்காக அரசியல் நடத்தினார் என்றும் தெரிவித்து தங்கள் வெறுப்பை அவரின் மரணத்தில் பண்டிகை போல் கொண்டாடி வெளியிட்டுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்துள்ளனர். இதன் போது 6 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.