Paristamil Navigation Paristamil advert login

ஹன்சிகா மீது வழக்குப் பதிவு… நடந்தது என்ன?

ஹன்சிகா மீது வழக்குப் பதிவு… நடந்தது என்ன?

8 தை 2025 புதன் 10:08 | பார்வைகள் : 520


குடும்ப வன்முறை புகாரில் நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி. ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி  குடும்ப வன்முறை புகார் தெரிவித்துள்ளார். அதில், “ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், எனது கணவருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினர். எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மூவரும் குடும்ப வன்முறையில் ஈடுப்பட்டனர்.

அவர்களால் தாக்குதலுக்கு உள்ளான நான், ‘பெல்ஸ் பால்சி’ (முகத்தின் ஒருபகுதி தசைகளின் செயலிழப்பு) நோயால் பாதிக்கப்பட்டேன். மூன்று பேரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள்.

சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 498-A, 323, 504, 506, 34 ஆகியவற்றின் கீழ் நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்