Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு, வெள்ளம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பனிப்பொழிவு, வெள்ளம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

8 தை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 1464


பனிப்பொழிவு மற்றும் மழை வெள்ள எச்சரிக்கை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மாவட்டங்கள் ஐவற்றுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Seine-Maritime மாவட்டத்துக்கு இன்று பிற்பகல் 2 மணி முதலும், Oise, Somme, Nord மற்றும் Pas-de-Calais ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மாலை 4 மணி முதலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 தொடக்கம் 10 செ. மீ வரை பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Calvados மாவட்டத்துக்கு மழை வெள்ளம் காரணமாக “செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்