வீதி நெருக்கடியில் நான்கு நாட்களைத் தொலைத்த பரிஸ் மக்கள்!
8 தை 2025 புதன் 20:00 | பார்வைகள் : 1637
சென்ற 2024 ஆம் ஆண்டில் பரிஸ் மக்கள் வீதி நெருக்கடியில் காத்திருந்து நான்கு நாட்களைத் தொலைத்துள்ளனர்.
சென்ற ஆண்டில் பரிஸ் மக்கள் சராசரியாக 97 மணிநேரங்கள் வீதிகளில் தரித்து நின்றுள்ளனர். முந்தைய 2023 ஆம் ஆண்டிலும் இதே அளவு நேரத்தையே வீதிகளில் செலவிட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் அதிகநேரம் வீதி நெருக்கடியில் செலவிடும் நகரங்களில் பரிசுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் சென்ற ஆண்டைப்போலவே இலண்டன் நகரம் பிடித்துள்ளது.
உலக அளவில் பரிசுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக பரிசின் விமான நிலையங்களுக்குச் செல்பவர்கள் நாள் ஒன்றுக்கு 5 தொடக்கம் 6 மணிநேரம் வீதி நெருக்கடியில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.