ஐசிசியின் முடிவால் இலங்கை அணிக்கு அதிர்ச்சி
9 தை 2025 வியாழன் 03:38 | பார்வைகள் : 155
இந்த ஆண்டு இலங்கை அணி 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடும் என்பதை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதாக ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, 25ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாட உள்ளது.
இலங்கைக்கு விளையாட வரும் அவுஸ்திரேலியா, 25ஆம் திகதி மற்றும் பிப்ரவரி 6ஆம் திகதி என இரண்டு டெஸ்ட்களில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) அதிர்ச்சியடைந்ததாக ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், "இந்த மாதம் அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகள் உட்பட, இந்த ஆண்டு முழுவதும் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இலங்கை விளையாடுகிறது என்கிற ஐசிசியின் தகவல் முற்றிலும் அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.