Paristamil Navigation Paristamil advert login

பரிசில் கோடை கால ஒலிம்பிக்! - வரலாற்றில் இன்று!!

பரிசில் கோடை கால ஒலிம்பிக்! - வரலாற்றில் இன்று!!

14 வைகாசி 2018 திங்கள் 13:30 | பார்வைகள் : 19027


இன்று, மே 14 ஆம் திகதி, பரிசில் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 1900 ஆம் ஆண்டு (Les Jeux olympiques d'été de 1900) ஆரம்பிக்கப்பட்ட நாள்! 
 
1900 ஆம் ஆண்டில் உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு அங்கமாக இந்த போட்டிகள் இடம்பெற்றன. 
 
மே 14, இல் இருந்து ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் இடம்பெற்றன. 
 
தற்போது இடம்பெறுவது போல் மிக பிரம்ம்மாண்டமான அரங்குகளோ, முதல்நாள் கலை நிகழ்வுகளோ, நிறைவு நாள் நிகழ்வுகளோ இடம்பெறவில்லை. நேரடியாகவே போட்டிகள் ஆரம்பித்திருந்தன. 
 
19 விதமான போட்டிகள், 28 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர்கள் என 1900 ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் களை கட்டியிருந்தது. 
 
ஆண் பெண் சமத்துவம் பேணும் பிரெஞ்சு தேசம், அதை நிரூபிக்கும் முகமாக, முதன் முறையாக இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண் வீராங்கனைகளை அனுமதித்தனர். தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த Hélène de Pourtalès எனும் பெண்ணே, உலகின் முதல் ஒலிம்பிக் சாம்பியனும் ஆனார்!
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள், Hélène de Pourtalès எனும் இப்பெண் சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், இதை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இடம்பெற்றது. 'ஒரு பெண் விளையாட்டில் ஈடுபடுவதா? அதுவும் சாம்பியனா...? கூடாது... ! பதக்கத்தை திருப்பி அளிக்கவேண்டும்!!' என்பதாக இருந்தது அவர்களது ஆர்ப்பாட்டம். அட கடவுளே!! 
 
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பெண்கள் மொத்தமாக கலந்துகொண்டனர். மீதமானவர்கள் அனைவரும் ஆண்கள்!!
 
போட்டிகள் எங்கு நடந்தது தெரியுமா..? பரிசில்.. Vélodrome de Vincennes மைதானத்தில்!! 
 
பல்வேறு சர்ச்சைகளை இந்த போட்டிகள் ஏற்படுத்தியிருந்தாலும், பல வெற்றிக்கதைகளையும் உருவாக்க தவறவில்லை!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்