கலிபோர்னியா மாகாணத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள காட்டுத்தீ.....
9 தை 2025 வியாழன் 04:12 | பார்வைகள் : 382
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தீ முதலில் பசிபிக் பாலிசேட்ஸ், ஈடன் மற்றும் ஹர்ஸ்ட் காடுகளில் தொடங்கியது, இப்போது அது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுகிறது.
பசிபிக் பாலிசேட்ஸில் காலை 10 மணிக்கும், ஈட்டனில் மாலை 6 மணிக்கும், ஹர்ஸ்டில் இரவு 10 மணிக்கும் தீ ஏற்பட்டது.
பசிபிக் பாலிசேட்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை நாட்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது.
இந்த காட்டுத்தீயின் காரணமாக 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸில் ஏற்பட்ட இந்த தீ 1 நிமிடத்தில் ஐந்து கால்பந்து மைதானம் அளவிலான பரப்பளவை எரிக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் நகரம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும். இங்கு 10 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
காட்டுத் தீ காரணமாக, சுமார் 50,000 பேர் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கலிபோர்னியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடன் பாதிக்கப்பட்டூருக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.