சீனாவின் உருவாக்கியுள்ள அதிபயங்கர ஆயுதம்.... அதிர்ச்சியில் உலக நாடுகள்
9 தை 2025 வியாழன் 04:37 | பார்வைகள் : 985
உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், நிமிடத்திற்கு 4,50,000 தோட்டாக்களை சுடக்கூடிய புதிய வகை இயந்திரத் துப்பாக்கியை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த புதிய துப்பாக்கி, ஹைபர்சோனிக் ஏவுகணைகளை கூட இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா வைத்திருக்கும் துப்பாக்கிகளால் நிமிடத்திற்கு அதிகபட்சமாக 4,500 தோட்டாக்கள் வரை சுட முடியும் என்று இருந்த நிலையில், சீனாவின் புதிய துப்பாக்கி, அமெரிக்க துப்பாக்கிகளை விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்பம் ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2006 ஆம் ஆண்டு, சீனா இந்த தொழில்நுட்பத்தை பெற சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு அதிகமான தோட்டாக்களை நிரப்புவது பெரும் சவாலாக இருக்கும் என்பதால், சீன பொறியாளர்கள் பீப்பாய் கொள்கலன் மூலம் தோட்டாக்களை தானாகவே நிரப்பும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம், துப்பாக்கியில் தோட்டாக்கள் முழுவதுமாக தீர்ந்த பின்னர், பீப்பாய் கொள்கலனில் இருந்து தானாகவே புதிய தோட்டாக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது.
சீனாவின் இந்த புதிய துப்பாக்கி, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கியின் வருகை, உலகின் பாதுகாப்பு நிலைமையை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் சீன ஊடகங்கள் தெரிவித்த நிலையில் அதிகாரப்பூர்வமாக தகவல் இதுவரை வெளியாகவில்லை.