Paristamil Navigation Paristamil advert login

தொடருந்தில் வைத்து இளைஞன் கைது!

தொடருந்தில் வைத்து இளைஞன் கைது!

9 தை 2025 வியாழன் 05:42 | பார்வைகள் : 1097


தொடருந்து ஒன்றில் பயணித்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், பயங்கவரவாதி போல் நடந்துகொண்டு, காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை Indre மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. La Souterraine மற்றும் Vierzon நகரங்களுக்கிடையே பயணித்த TER தொடருந்து ஒன்றில் ஏறிய குறித்த நபர், கைகளில் பெட்டி ஒன்றை வைத்துக்கொண்டு, அதில் வெடிகுண்டு இருப்பதாக பயணிகளை பயணித்துள்ளார். அதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடருந்தில் இருந்து பலர் காவல்துறையினரை அழைத்துள்ளனர். சில நிமிடங்களில் தொடருந்து Argenton-sur-Creuse நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

காவல்துறையினர் குறித்த நபரை அடையாளம் கண்டு மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இருக்கவில்லை. அத்துடன் அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. போலியான இந்த அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

 

எழுத்துரு விளம்பரங்கள்