பிரான்சில் சர்ச்சைக்குள்ளான airbags! - இதுவரை 15 பேர் பலி!!
9 தை 2025 வியாழன் 06:22 | பார்வைகள் : 1407
பிரான்சில் மகிழுந்துகளில் உள்ள உயிர்க்கவசமான airbags சரியாக வேலை செய்யாததினால் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
பிரான்சில் தற்போது புழக்கத்தில் உள்ள மகிழுந்துகளில் கிட்டத்தட்ட 500,000 மகிழுந்துகளுக்கு இந்த airbags பிரச்சனை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் கடல்கடந்த நிர்வாகப்பிரிவில் 100,000 மகிழுந்துகள் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட்ள்ளன. 2016 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 15 பேர் இந்த airbags சரியாக செயற்படாததினால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்படுத்தும் மகிழுந்துகள் 1998 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதன் உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சகத்தினால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக என உறுதிப்படுத்தவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லை என்றால் https://www.ecologie.gouv. fr/rappel-airbag-takata எனும் இணையத்தளத்துக்குச் சென்று உங்கள் மகிழுந்தின் airbags தொடர்பான பாதுகாப்பு தகவல்களை சரிபார்க்கமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (இணைப்பில் உள்ள இடைவெளியை நீக்குவதன் மூலம் அதனை பயன்படுத்த முடியும்)