Paristamil Navigation Paristamil advert login

■ பனிப்பொழிவு.. வெள்ளம்.. ஏழு மாட்டங்களுக்கு எச்சரிக்கை!!

■ பனிப்பொழிவு.. வெள்ளம்.. ஏழு மாட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 தை 2025 வியாழன் 07:20 | பார்வைகள் : 959


ஏழு மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

 

ஜனவரி 9 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை நாட்டின் வடக்குப் பகுதிகளில் பலத்த பனிப்பொழிவு பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. 5 தொடக்கம் 10 செ. மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என Météo France எச்சரித்துள்ளது.

Pas-de-Calais மற்றும் Nord மாவட்டங்களுக்கு நண்பகல் 12 மணியில் இருந்து அங்கு பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு அவ்விரு மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Ille-et-Vilaine, Calvados, Eure, Seine-Maritime மற்றும் Oise ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும், அம்மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்