Paristamil Navigation Paristamil advert login

Jean-Marie Le Pen : இறுதிச் சடங்கு எப்போது??

Jean-Marie Le Pen : இறுதிச் சடங்கு எப்போது??

9 தை 2025 வியாழன் 08:15 | பார்வைகள் : 1150


மறைந்த மூத்த அரசியல் தலைவர் Jean-Marie Le Pen இன் இறுதிச் சடங்கு தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. 

பிரான்சி வடமேற்கு மாவட்டமான Morbihan இல் உள்ள அவரது சொந்த நகரமான La Trinité-sur-Mer இல் அவரது இறுதிச் சடங்கு வரும் ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை இடம்பெற உள்ளது. அதே நகரில் தான் அவர் பிறந்திருந்தார். அத்தோடு அவரது பெற்றோர்களும் அங்கேயே புதைக்கப்பட்டிருந்தனர்.

"நெருங்கிய உறவினர்களோடு" மட்டும் இந்த இறுதிச் சடங்கு இடம்பெற உள்ளதாக அவரது மகள் மரீன் லு பென் தெரிவித்தார்.

அதன் பின்னர், 16 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் உள்ள Notre-Dame du Val-de-Grâce தேவாலயத்தில் காலை 11 மணி அளவில் மதம்சார்ந்த அஞ்சலி நிகவும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்