porte de Vincennes பயங்கரவாத தாக்குதல் நடந்த 10-வது ஆண்டு நினைவு.
9 தை 2025 வியாழன் 10:24 | பார்வைகள் : 1108
பிரான்சில் 2015ம் ஆண்டு பிறந்த சிலநாட்களில் பெரும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம் பெற்றது. முதலில் 07/01/2015 பிரான்சில் இருந்து வெளிவரும் கேலிச்சித்திரத்தின் மூலம் செய்தி சொல்லும் 'Charlie Hebdo' பத்திரிகை அலுவலகத்தில் புகுந்த Kouachi சகோதர பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
அடுத்து 09/01/2015 Montrouge பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதியான Amedy Coulibaly நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி Clarissa Jean-Philippe வீதியில் வைத்து கொல்லப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது Amedy Coulibaly நேராக porte de Vincennes பகுதியில் உள்ள யூதர்களின் விசேட பல்பொருள் அங்காடியான Hypercacher கடைக்குள் புகுந்து அங்கு பணியாற்றியவர்கள், வாடிக்கையாளர்களை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்.
காவல்துறையினர் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி பயங்கரவாதியிடம் இருந்து பணையக் கைதிகளை காப்பாற்ற முற்படும் போது அங்கு நால்வரை சுட்டுக் கொன்றார்.
இன்று அந்த நான்கு யூதர்களின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் அங்கு நடைபெறவுள்ளது. அந்த நான்கு பேரின் பெயர்களும் பல்பொருள் அங்காடியின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.