▶ பனிப்பொழிவு.. இருவர் பலி! - 20 பேர் காயம்!!
9 தை 2025 வியாழன் 11:29 | பார்வைகள் : 14586
பனிப்பொழிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Nord மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்று வருகிறது.
ஐம்பது வயதுடைய ஒருவர் rue Jean-Jaurès எனும் வீதியில் விழுந்து காயமடைந்து பலியாகியுள்ளார். இன்று ஜனவரி 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, வீடற்ற ஒருவர் (SDF) உறைந்து உயிரிழந்த நிலையில், அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக Nord மாவட்டத்தில் இரவு முழுவதும் 32 தடவைகள் உதவிக்குழு அழைக்கப்பட்டிருந்தனர். 12 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
Nord மற்றும் பா-து-கலே மாவட்டங்களுக்கு இன்று பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan