Paristamil Navigation Paristamil advert login

'வணங்கான்' படத்தில், மறைக்கப்படும் ரகசியம்?

'வணங்கான்' படத்தில், மறைக்கப்படும் ரகசியம்?

9 தை 2025 வியாழன் 14:49 | பார்வைகள் : 267


'வர்மா' திரைப்படத்திற்கு  பின்னர், இயக்குனர் பாலா இயக்கி முடித்துள்ள திரைப்படம் தான் 'வணங்கான்'. இந்த படம் முதலில் சூர்யா நடிப்பில் உருவாக இந்த நிலையில், ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து, மீண்டும் 'வணங்கான்' படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்க உள்ளதாக பாலா அறிவித்தார். இந்த படத்தை  சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், நாளை பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது. சேது, நந்தா, பிதாமகன் வரிசையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை பாலா ஆச்சர்யப்படுத்துவார் என தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் பாலா, 'வணங்கான்' கதையை ஒரே வரியில் கூறி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார்.

அதாவது "உங்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் பத்து பேருக்கு பாதிப்பு வரும்.. ஆனால் சொல்லாமல் மனதிலேயே பூட்டிக்கொண்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சூழலில் என்ன முடிவெடுப்பீர்கள் என்பது தான் வணங்கான் படத்தின் ஒன் லைன் கதை என்று கூறியுள்ளார்

அதே போல் இந்த படத்தில் இதற்க்கு முன் பார்த்த அருண் விஜயை விட,  அப்படியே வித்தியாசமாக தெரிவார். காரணம்  இந்தப் படத்திற்காக தன்னை இதுவரை இல்லாத அளவில் அப்படியே மொத்தமாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளார் என கூறியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ரோஷ்ணி பிரகாஷின் கதாபாத்திரமும் அதிகம் பேசப்படும் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'வணங்கான்' படத்தில், முக்கிய வேடத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, நடிகை ரித்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். சினிமாவில் ஒரு இயக்குனராக கால் பதித்து சுமார் 25 வருடங்களை இயக்குனர் பாலா எட்டி இருந்தாலும், இந்த எண்ணி 10 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே இவர் இயக்கத்தில் வெளியான  படங்கள் ரசிகர்கள் மனதை கவர தவறிய நிலையில், 'வணங்கான்' மூலம் பாலா மீண்டும் கம் பேக் கொடுப்பார் என தெரிகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்