Paristamil Navigation Paristamil advert login

ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திற்கு அட்வைஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திற்கு  அட்வைஸ்

9 தை 2025 வியாழன் 15:14 | பார்வைகள் : 253


துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி, 'வணக்கம் சென்னை, காளி' படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம்ரவி, நித்யா மேனன், விநய் ராய், யோகி பாபு, ஜான் கொகைன், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். எவ்வளவு பெரிய படத்துக்கும் ஹிட் கொடுக்கிறார். 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களை தாண்டி நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது. அதெல்லாம் செய்துவிட்டு “தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்” என்று சொல்லும் அனிருத்தின் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது. உங்களுடைய வெற்றிக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும்'' என்று குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அனிருத் மேற்கத்திய பாடல்களை தழுவியே தனது படங்களின் பாடல்களை உருவாக்கி வருகிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்