Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : இரு மாணவர்களை தாக்கி தொலைபேசி பறிப்பு.. இருவர் கைது!!

பரிஸ் : இரு மாணவர்களை தாக்கி தொலைபேசி பறிப்பு.. இருவர் கைது!!

9 தை 2025 வியாழன் 17:07 | பார்வைகள் : 1360


உயர்கல்வி மாணவர்கள் இருவரை தாக்கி அவர்களிடம் இருந்து தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Jean de la Fontaine உயர்கல்வி பாடசாலைக்கு அருகே இச்சம்பவம் இன்று ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களை வழிமறித்த இருவர் அவர்களை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தொலைபேசி மற்றும் இயர்போன் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் Michel-Ange Molitor மெற்றோ நிலையத்துக்குச் ஓடிச் சென்று கூட்டத்துக்குள் மறைந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த இருவரையும் உடனடியாக கைது செய்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்