Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையே போர் பதற்றம்

  இஸ்ரேல் மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையே போர் பதற்றம்

9 தை 2025 வியாழன் 17:13 | பார்வைகள் : 749


இஸ்ரேல் மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையே போர் ஏற்பட சாத்தியம் உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

 இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு அந்த நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு தலைவர் சார்பில் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதில் துருக்கி ஒட்டோமன் பேரரசை உருவாக்கும் நோக்கத்தில் இந்த போர் இருக்க கூடும் என்றும்,

இஸ்ரேல் பிரச்சனையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்யா (Russia) போர் தொடுத்து வருகிறது. அதேபோல் பலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது.

இந்த 2 போர்களிலும் சுமார் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக இஸ்ரேல் - துருக்கி இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தகவல் சென்றுள்ளதோடு, எச்சரிக்கையாக  இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அடிப்படை என்பது மொத்தமாக மாறி உள்ளதை காண முடிகிறது.

ஈரான் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது புதிதாக இன்னொரு சக்தி களத்தில் நுழைந்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் நாம் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கை என்பது எதிர்காலத்தை இஸ்ரேலை பாதுகாக்கும் பாதை மேப்பாக உள்ளது. அதன்படி எதிர்காலத்தில் நாம் நகர்வோம்'' என தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்