Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் நடுங்கவைக்கும் புதிய ஆய்வறிக்கை

காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் நடுங்கவைக்கும் புதிய ஆய்வறிக்கை

10 தை 2025 வெள்ளி 08:23 | பார்வைகள் : 10336


இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதல் ஒன்பது மாதங்களில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வறிக்கையை தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

இதில் பாலஸ்தீன நிர்வாகம் பதிவு செய்துள்ள எண்ணிக்கையைவிட 40 சதவிகிதம் இறப்பு அதிகமாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 அக்டோபர் மாத்ம் 7ம் திகதி தொடங்கி, 2024 ஜூன் 30ம் திகதி வரையில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,877 என்றே காஸா சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.

ஆனால் தற்போது லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது 55,298 முதல் 78,525 வரையில் இருக்கலாம் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர் தொடங்கி முதல் 9 மாதங்களில் 64,260 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளது உறுதி என்றே லான்செட் மருத்துவ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில் பல்வேறு காரணங்களால் 41 சதவித இறப்பு காஸா சுகாதாரத்துறையால் பதிவு செய்யப்படவில்லை. இந்த எண்ணிக்கையானது போர் தொடங்குவதற்கு முன்பான காஸா மக்கள்தொகையில் 2.9 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த லான்செட் குழுமம் முன்னெடுத்த ஆய்வில், கொல்லப்பட்டவர்களில் 59 சதவீதம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது போரினால் கொல்லப்பட்டவர்கள் மட்டுமே என்றும், சிகிச்சை பலனளிக்காமல் அல்லது உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகள் அல்லது இடிபாடுகளுக்குள் புதைந்ததாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்றும் லான்செட் குழுமம் விளக்கமளித்துள்ளது.

வியாழக்கிழமை, காஸாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 மாத காலப் போரில் 46,006 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடில் 1,208 பேர்கள் கொல்லப்பட்டதாகவே நெதன்யாகு அரசாங்கம் உறுதி செய்திருந்தது.

போரினால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பில் காஸாவின் சுகாதார அமைச்சகம் மீது எப்போதும் சந்தேகத்துடனே இஸ்ரேல் கேள்வி எழுப்பி வந்துள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026