இரத்த மாற்று சிகிச்சை! - முதன் முதலாக கண்டறிந்த பிரெஞ்சு மருத்துவர்!!
8 வைகாசி 2018 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 19056
இன்றைய நவீன மருத்துவ உலகத்தில், இரத்த மாற்று சேவை, இரத்தம் சுத்திகரிப்பு என பல வசதிகள் படையெடுத்துள்ளன. ஆனால் மனித உடலில் உள்ள இரத்தத்தை பிறிதொரு மனித இரத்தத்தினால் மாற்ற முடியும் என முதன் முதலில் கண்டுபிடித்து உலகிற்குச் சொன்னவர் ஒரு பிரெஞ்சு மருத்துவர்...!!
அவர் பெயர் Jean-Baptiste Denys. உலகில் முதன் முறையாக இரத்த மாற்றத்தை கண்டுபிடித்ததோடு, அதை செயற்படுத்தியும் காட்டினார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்... இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1667 ஆம் வருடம். அன்றைய காலத்தில் நவீன விஞ்ஞானம் அரை ஜான் தான் வளர்ந்திருந்தது.
Jean-Baptiste Denys, பிரான்சின் 14 ஆம் லூயி மன்னனின் ஆஸ்தான மருத்துவராக பணி புரிந்தார்.
முதன் முதலாக 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இரத்த மாற்று சிகிச்சையை மேற்கொண்டார். 20 தடவைகளுக்கு மேல் இரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சி கடித்த நிலையில், செம்மறி ஆடுகளின் இரத்தத்தை சிறுவனுக்கு ஏற்றினார். அவன் உயிர் தப்பினான்.
பின்னர், தொழிலாளி ஒருவருக்கும் இதேபோன்று இரத்த மாற்று சிகிச்சையை மேற்கொண்டார்.
இவை இரண்டும் சிறிய அளவிலாள இரத்த மாற்று சேவை என்ற போதும், முழு மனிதனுக்கும் தேவையான இரத்தத்தை மாற்ற முடியும் என அவர் அப்போது குறிபிட்டார்.
ஆனால் துரதிஷ்ட்டவசமாக 1670 ஆம் ஆண்டு இந்த சிகிச்சை மிக ஆபத்தானது என தடை செய்யப்பட்டது.
ஆனால், அது எதிர்காலத்தின் இன்றியமையா சேவை என அப்போது அறிந்திருக்கவில்லை!!