Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரியில்  

இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரியில்  

10 தை 2025 வெள்ளி 09:16 | பார்வைகள் : 179


 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீடு 64 மையங்களில் புதன்கிழமை (8) தொடங்கியது என்று அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திதி நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் 244,092 பேரும், தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 


 

எழுத்துரு விளம்பரங்கள்