Paristamil Navigation Paristamil advert login

Île aux Cygnes - செயற்கையாய் ஒரு தீவு!!

Île aux Cygnes - செயற்கையாய் ஒரு தீவு!!

7 வைகாசி 2018 திங்கள் 12:30 | பார்வைகள் : 19388


ஈஃபிள் கோபுரத்தில் ஏறுகின்றீர்கள்.... அங்கிருந்து சென் நதியை நோட்டம் விடுகின்றீர்கள்... சென் நதிக்கு நடுவே... மூன்று பாலங்களை தொடுத்து, நீளமாய் பச்சையாய் ஒன்று தென்படுகிறதே.. என்ன அது..??
 
அது தான், செயற்கையாய் உருவாக்கப்பட்ட தீவு, Île aux Cygnes என்பது அதன் பேரு!!
 
15 ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த செயற்கைத் தீவு 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென் நதியை ஊடறுக்கும் இந்த பாலத்துக்கு மேலும் பலம் சேர்க்க இந்த தீவு உருவாக்கப்பட்டதாக வரலாறு உண்டு. 
 
தீவின் ஒரு முனையில், அமெரிக்க சுதந்திர தேவி சிலை ( The Statue of Liberty) நிறுவப்படுள்ளது. அது பரிசுக்கு வந்த கதை முன்னர் ஒருதடவை பிரெஞ்சு புதினத்தில் குறிப்பிட்டிருந்தோம். 
 
அதை தொடர்ந்து, Pont de Grenelle மேம்பாலம் உள்ளது. அந்த பாலம் நேராக இருந்தாலும், அதன் பின்னால், மூன்றாம் பிறை போல் கால் வட்டமாக உள்ள, Pont Rouelle பாலம் உள்ளது. 
 
அதைத் தொடர்ந்து நீளும் Île aux Cygnes, இறுதியாக Pont de Bir-Hakeim மேம்பாலத்தை கடந்து வந்து முடிகிறது. 
 
ஈஃபிளில் இருந்து பார்த்தால், பச்சை நிற பென்சிலான் கோடு கிழித்தது போல் இருக்கும்...  ஆனால் அது 850 மீட்டர்கள் நீளமும், 11 மீட்டர்கள் அகலமும் கொண்டது. 
 
இங்குள்ள சுதந்திர தேவி சிலை 22 மீட்டர்கள் உயரம் கொண்டது. சில அசகாய புகைப்படக்கலைஞர்கள், முன்னால் சுதந்திர தேவி சிலை நிற்க, பின்னார் ஈஃபிள் கோபுரம் கம்பீரமாய் நிற்பது போல் புகைப்படங்கள் எல்லாம் எடுத்து அசத்தியிருக்கின்றார்கள்... இணையத்தில் அவற்றை பார்க்கலாம்...!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்