'காதல்' சுகுமார் மீது நடிகை புகார்..!
10 தை 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 309
ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் நடிகை ஒருவர் தன்னை ‘காதல்’ சுகுமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரத் நடித்த 'காதல்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சுகுமார். காமெடி நடிகரான சுகுமார் மீது நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘காதல்’ படத்தில் நடித்த துணை நடிகர் சுகுமாருக்கும் எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் காதலித்தோம். என்னிடமிருந்து நகையும் பணமும் சுகுமார் வாங்கி வந்துள்ளார்.
சமீப காலமாக என்னுடைய தொடர்பை சுகுமார் தவிர்த்து வந்தார். என்னுடைய செல்போனையும் முடக்கி உள்ளார்," என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சுகுமாரிடம் கேட்ட போது, "தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகுமார் தனக்கு திருமணமானதை மறைத்து என்னிடம் பொய்யாக பழகியதுடன் பண மோசடி செய்துள்ளார்" என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.