Paristamil Navigation Paristamil advert login

லாஸ் ஏஞ்சல்ஸை சூழ்ந்துள்ள காட்டுத்தீ - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

லாஸ் ஏஞ்சல்ஸை சூழ்ந்துள்ள காட்டுத்தீ - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

10 தை 2025 வெள்ளி 14:45 | பார்வைகள் : 478


கடந்த கிழமையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டி தீ பரவ ஆரம்பித்தது, தற்பொழுது கட்டுக்கடங்காத வண்ணம் காட்டு தீ முழு நகரத்தையும் சூறையாடியுள்ளது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸை மொத்தமாக சூழ்ந்துள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை பத்து பேர்கள் இறந்துள்ளதாகவும் தீயில் எரிந்து 10,000 வீடுகள் பாழானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தீயணைப்பாளர்களும், சடலங்களை மீட்கும் நாய்களும் எரிந்த குப்பைகளை தொடர்ந்து சோதனையிட்டு, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றிலேயே மிகவும் மோசமான காட்டுத்தீ இதுவென்றே கூறப்படுகிறது.

இதுவரை 10 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர். ஆனால் தீப்பிழம்புகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

180,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 200,000 பேர்கள் தற்போது வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியிருக்கும் பல பிரபலங்கள் தங்கள் குடியிருப்புகள் தீக்கிரையாவதை கவலையுடன் கண்டு நின்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தனியார் வானிலை அறிவிப்பாளரான அக்யூவெதர் வெளியிட்டுள்ள தகவலில், மொத்த சேதம் மற்றும் பொருளாதார இழப்பு 150 பில்லியன் டொலராக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.


இந்த நிலையில் தீ விபத்துக்கான இழப்பில் 100 சதவீதத்தையும் பெடரல் அரசாங்கமே ஈடுகட்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தார்.

இதுவரை சுமார் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ வியாபித்துள்ளது. இரவுப்பணியில் மட்டும் 400 தீயணைப்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். Palisades பகுதி காட்டுத்தீயில் மட்டும் 20,000 ஏக்கர் எரிந்துள்ளது.


இப்பகுதியில் 5,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. Eaton பகுதியில் 14,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 5,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை கட்டுக்குள்கொண்டுவர முடியாமல் உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்