Paristamil Navigation Paristamil advert login

யாழில் மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில்  மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

10 தை 2025 வெள்ளி 16:16 | பார்வைகள் : 230


யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. 

கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து ,  மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது. 

மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது , உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து , குழந்தையை மீட்டு , கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன் போது குழந்தை உயிரிழந்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்