ஈஃபிள் கோபுரத்தை அகற்ற சாள் து கோல் பரிந்துரை! - மயிரிழையில் தப்பிய கோபுரம்!!
6 வைகாசி 2018 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 19383
இன்று நாம் ஆசை தீர பார்த்தும்.. ரசித்தும் கொண்டாடும் ஈஃபிள் கோபுரத்தினை அகற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தப்பி பிழைத்து.. இன்றும் ஜொலிக்கிறது ஈஃபிள்!!
ஈஃபிள் கோபுரம் அமைக்கப்படும் போதே, அதை 10 வருடத்தில் அகற்றவேண்டும் என கோரப்பட்டதன் பிற்பாடே அனுமதிக்கப்பட்டது. பத்து வருடங்களில் அகற்ற முற்பட்ட போது அரசு 'எதற்கும் இருக்கட்டும்!' என சொல்லி தள்ளிப்போட்டது. பின்னர் அது ரேடியோ நிலையமாக மாற்றப்பட்டதும் நீங்கள் அறிந்ததே. இதெல்லாம் இருக்கட்டும்...
1960 ஆம் ஆண்டு, சாள் தூ கோல் ஜனாதிபதியாக இருக்கும் போது, ஈஃபிள் கோபுரத்தை அகற்ற பரிந்துரைத்தார்....
என்னது ஈஃபிள் கோபுரத்தை அகற்றுவதா? என பல பிரெஞ்சு மக்கள் பலர் கொந்தளிக்க ஆரம்பித்தனர். ஈஃபிள் அப்போது தான் உலகலாவிய மக்களிடம் புகழடைய ஆரம்பித்திருந்தது.
ஈஃபிள் பிரான்சின் அடையாளச் சின்னமாக மாறியிருக்கும் சமயத்தில், அதை அகற்றுவதா..?, என கேள்விகள் எழ, அந்த எண்ணம் கைவிடப்பட்டது.
ஏன் ஜனாதிபதி அப்படி குறிப்பிட்டார் என தெரியுமா..? 1960 ஆம் ஆண்டு கனடாவின் மென்றியல் நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் ஈஃபிள் கோபுரத்தை மீண்டும் அமைப்பதற்காக இதுபோன்று தெரிவித்தார்.
நல்லவேளை, கொஞ்சம் அசந்திருந்தால் ஈஃபிள் கோபுரம் கனடாவுக்கு சொந்தமாகியிருக்கும்.....!!