Paristamil Navigation Paristamil advert login

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு சரத் பவார் திடீர் பாராட்டு

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு சரத் பவார் திடீர் பாராட்டு

11 தை 2025 சனி 07:45 | பார்வைகள் : 265


தன் சித்தாந்தத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே போல, நாமும் செயல்பட வேண்டும்,” என, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில், தன் கட்சி தொண்டர்களிடையே, சரத் பவார் பேசியதாவது:

ஹிந்துத்துவா அமைப்பின் சித்தாந்தத்திற்கு அசைக்க முடியாத விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ்., காட்டுகிறது. அதே போல, அந்த அமைப்பின் ஊழியர்களும் கொள்கை தவறாமல் ஒரே பாதையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.

நாமும் அவர்களை போல செயல்பட்டு, சத்ரபதி ஷாஹு மகாராஜ், மகாத்மா பூலே, அம்பேத்கர், யஷ்வந்த்ராவ் சவான் ஆகியோரின் சித்தாந்தங்களை பரப்ப வேண்டும்.

லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு பின், நாம் மனநிறைவு அடைந்தோம். அதே சமயம், ஆளும் மஹாயுதி கூட்டணியினர், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்ததால், சட்டசபை தேர்தலில் வென்றனர்.

இந்த தேர்தலில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்த பணிகளை எடுத்துரைக்க தவறியதே தோல்விக்கான காரணங்களில் ஒன்று. உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்