வீட்டுக்குத் திரும்ப ஆசையாக இருக்கிறது - விண்வெளியிலிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் நெகிழ்ச்சி
11 தை 2025 சனி 08:43 | பார்வைகள் : 143
விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸ், ஏழு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வீட்டுக்குத் திரும்ப ஆசையாக இருப்பதாக சுனிதா நெகிழ்ச்சிக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஏழு மாதங்களாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸும், அவரது சக வீரரான பட்ச் வில்மோரும் வீட்டுக்குத் திரும்ப ஆசையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
விண்வெளியில் வேலை செய்வது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்றாலும், வீட்டுக்குத் திரும்ப ஆசையாக இருக்கிறது என்கிறார் சுனிதா.
குடும்பத்தைப் பிரிந்து சிறிது காலமாகிறது, ஆகவே, வீட்டுக்குத் திரும்பவேண்டும். அதே நேரத்தில், இங்கே விண்வெளி மையத்திலும் நிறைய வேலை இருக்கிறது என்று கூறியுள்ளார் சுனிதா.
சுனிதாவும், வில்மோரும், மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.