Paristamil Navigation Paristamil advert login

இயற்பியல் மேதை Léon Foucault! - சில ஆச்சரிய தகவல்கள்!!

இயற்பியல் மேதை Léon Foucault! - சில ஆச்சரிய தகவல்கள்!!

5 வைகாசி 2018 சனி 12:30 | பார்வைகள் : 19456


 பிரெஞ்சு தேசம் கண்டெடுத்த அற்புத இயற்பியல் மேதை Léon Foucault. இந்த பூலோகம் சுற்றுவதை முதல் முதலாக இந்த உலகிற்கு கருவிகள் அமைத்து காட்சிப்படுத்தியவர் இவர்...! இவர் குறித்த மேலும் சில தகவல்கள் இன்றைய பிரெஞ்சு புதினத்தில்....
 
பரிசில் செப்டம்பர் 18, 1819 ஆம் ஆண்டு பிறந்து, பரிஸ் பல்கலைக்கழகத்திலேயே பயின்றார். சிறுவயது முதலே அவருக்கு இயற்பியல் மீதும், கணிதம் மீதும்  பெரும் ஆர்வம் இருந்தது. 
 
இவர், எதிர்காலத்துக்கான இரண்டு முக்கியமான கதவுகளை திறந்துவிட்டு சென்றார். 
 
ஒன்று Eddy current. மற்றையது Foucault pendulum.
 
கடத்திகளுக்குள் மின்சாரம் விரயமாகாமல் அதற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பது தான் Eddy current. அதை முதன் முதலாக கண்டு பிடித்தவர் இவர்தான். 
 
பூமி சுழற்சி மற்றும் அதன் பாதை என்பவற்றை Foucault pendulum எனும் கருவி அமைத்து உலகுக்கு காட்டினார். 
 
தவிர, முன்னதாக இவர் ஒளியின் வேகத்தை கணிப்பிடவும் முயற்சித்தார். 
 
இந்த கண்டுபிடிப்புக்களுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பிரித்தானிய Royal Society அமைப்பினால் அறிவியல் துறைக்கு வழங்கப்படும் Copley Medal விருது, இவருக்கு 1855 ஆம் வருடம் வழங்கப்பட்டது. 
 
முன்னதாக இவர் மருத்துவம் பயின்றிருந்தாலும், இரத்தசோகை நோய் இவருக்கு இருந்ததால், அதன்மீது ஆர்வத்தை தொடர்ந்தும் தக்கவைக்க முடியாமல் இருந்துள்ளதாக வரலாறு உண்டு. 
 
 பின்னர், தனது 48 வது வயதில், 11 பெப்ரவரி 1868 ஆம் ஆண்டு பரிசில் உயிரிழந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்