பிரான்சில் அதிகரிக்கும் சிறுவர்களுக்கு இடையில் வன்முறை.
11 தை 2025 சனி 09:02 | பார்வைகள் : 771
பிரான்சில் அண்மையில் மிகவும் மோசமான வன்முறை தாக்குதல்கள் சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்டு வருகிறது. பதின்ம வயதை கொண்ட சிறுவர்களிடம் உயிராபத்தான ஆயுதங்கள் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை Eure இல் உள்ள Évreux இல் 14 வயது சிறுவன் கொல்லப்படுகிறான். சில நிமிடங்களில் Évreux காவல் நிலையத்தில் 16 வயது சிறுவன் சரணடைகிறான். இந்த செய்திகள் இன்று சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு பல்வேறுபட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பாலும் சிறுவயதிலேயே போதை வஸ்துக்கு அடிமையாகுவதும், போதைவஸ்து வியாபாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுவதுமே முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.