சீன ட்ரோன்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
11 தை 2025 சனி 09:52 | பார்வைகள் : 389
அமெரிக்கா நாடனது சீனாவில் தயாரக்கப்பட்ட ரோன்களை கட்டுப்படுத்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக சீன உற்பத்தி ட்ரோன்களால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டு சீனத் தயாரிப்பு ட்ரோன்களை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க வர்த்தக திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
அதேவேளை உளவு மற்றும் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய இராணுவ கட்டமைப்புக்களுக்கு அருகில் சீனத் தயாரிப்பு ட்ரோன்கள் அதிகரித்து வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.