Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் ?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் ?

11 தை 2025 சனி 13:11 | பார்வைகள் : 274


பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன்  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் நடைபெறும், எவிக்ஷன், வழக்கம் போல்  இந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில், டைட்டில் வின்னர் கனகோடு இருந்த போட்டியாளரை தான் பிக் பாஸ் வெளியே அனுப்பி உள்ளார்.  அவர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இதில் முதல் நாளே ரவீந்த சந்திரசேகரன், தர்ஷா குப்தா, சாச்சனா, சத்யா, சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், பவித்ரா ஜனனி, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்கள் இருந்து முதல் நாளே... அதாவது 24 மணி நேரத்தில்,  ஒருவரை எலிமினேட் செய்து வெளியே அனுப்ப வேண்டும், என பிக்பாஸ் அறிவித்ததை தொடர்ந்தது சாச்சனா ஒரே நாளில் வெளியேற்றப்பட்டார்

பின்னர் ஒரு வாரம் கழித்து, மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். போட்டியாளர்கள் ஒரு புறம் குறைந்து கொண்டே வந்த நிலையில், அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் ராணவ், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், சிவக்குமார், ரயான், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தனர்.

மஞ்சரி, ராணவ், ரயான், போன்ற போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடினாலும், மற்ற  மூன்று போட்டியாளர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 8 போட்டியாளர்கள் நுழைந்து உள்ளிருக்கும் போட்டியாளர்கள் குறித்து கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில், அவரை கலங்கடித்து வருகின்றனர். இதுவரை கெத்தாக சுற்றிக் கொண்டிருந்த விஜே விஷால் மற்றும் சௌந்தர்யாவை கட்டம் கட்டி போட்டு தாக்கியதில் அவர்கள் கண்ணீர் விட்டே அழுது விட்டனர்.

இது குறித்து இன்றைய புரோமோவில், விஜய் சேதுபதி குறிப்பிட்டு பேசி இருந்தார். வைல்டு கார்டு சுற்று உள்ளே நுழைந்துள்ள இந்த 8 போட்டியாளர்களின், இருவர் ஃபைனலிஸ்ட் ஆக வாய்ப்புள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார். இதற்காக தற்போது தீவிரமாக போட்டி போட்டு வரும் வைல்டு காட்டு போட்டியாளர்கள் ஒரு பக்கம் இருக்க, தங்களை காப்பாற்றிக் கொள்ள ஹவுஸ் மேக்ஸும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது கணிக்க முடியாத நிலை இருந்த நிலையில், எதிர்பார்ப்பு தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான அருண் பிரசாத் தான் வெளியேறியுள்ளார்.டைட்டில் வின்னர் நான் தான் என்பது போல், காலரை தூக்கி விட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு ஆதரவாக இவரின் காதலி அர்ச்சனா ரவிச்சந்திரன் தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல் ஃபைனலுக்கு செல்லும் முன்பே அருண் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்