Paristamil Navigation Paristamil advert login

இளையராஜா தலைமையில் காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு...

இளையராஜா தலைமையில் காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு...

11 தை 2025 சனி 13:14 | பார்வைகள் : 3448


இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியை கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு!இசைஞானி இளையராஜா தலைமையில் தனது காதலியை கரம் பிடித்த தெருகுரல் அறிவு!சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியுமுள்ள தெருகுரல் அறிவு தனது காதலி கல்பனாவை கரம் பிடித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து  சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.  திருமாவளவனுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்